states

img

பாஜகவை வீழ்த்தக் காத்திருக்கும் மக்கள்

சிம்லா, நவ.9- இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்த இடங்கள் 68.  தற்போ தைய சட்டமன்றத்தில் பாஜக உறுப்பி னர்கள் 44 பேர், காங்கிரஸ் உறுப்பி னர்கள் 21 பேர் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் இருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளார். 2017-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 49 சதவீத வாக்குகளையும் காங்கி ரஸ் 42 வாக்குகளைப் பெற்றிருந்தன.  2019-ஆம் ஆண்டு  நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்த லில் தங்களது சாதனைகளைச் சொல்லி வெற்றி பெறலாம் என நம்பி பாஜக பிரச்சா ரம் செய்து வருகிறது. பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்துவோடு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற  முழக்கத்தோடு காங்கிரஸ் பிரச்சாரம் செய்துவருகிறது. இரண்டு கட்சிகளிலும் சீட் கிடைக்காதவர்களின் மோதல் இன்னும் ஓயவில்லை. ஆம் ஆத்மி தனது எண்  ணிக்கையை தொடங்கலாம் என எதிர் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.  இங்கு குறிப்பிடவேண்டிய அம்சம், பாஜக-காங்கிரசுக்கு எதிராக மாற்றுத்திட் டங்களை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 11 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

தீவிரமடைந்த விவசாயிகள் போராட்டம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயி கள்  இமாச்சலப்பிரதேச மாநிலம் முழுவதும்  தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ள னர். ஆப்பிள் உற்பத்தி செய்யும்  விவசாயி களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. மாநி லத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் ஆப்பிளும் ஒன்று. உற்பத்திச் செலவு அதிகரிப்பு, காலநிலை மாறுபாடு, உரம் விலை அதிகரிப்பு, போக்கு வரத்து செலவு அதிகரிப்பு எரிபொருள் விலை அதிகரிப்பு, ஆகியவை பிரதான கார ணங்கள். மேலும், அட்டைப்பெட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீமாக அதிகரித்துள்ளது.  மற்றொரு முக்கியக் காரணம், சிறு-குறு விவசாயி களை பாதுகாக்க வேண்டிய அரசு, பெரிய அளவில் ஆப்பிள் உற்பத்தி செய்பவர் களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. ஜிஎஸ்டி உயர்வால் சிறு விவசாயிகள் கார்ப்பரேட்டுகளை நம்பியே உள்ளனர்.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஆப்பிள் உற்பத்தி

ஆப்பிள்களை மட்டுமே கொள்முதல் செய்கின்றன.  மொத்த உற்பத்தியில் 20- 30 சதவீதம் மட்டுமே தரமான ஆப்பிள்  கள் என கார்ப்பரேட்டுகள் முடிவு செய்  கின்றனர். எஞ்சியுள்ள 70 சதவீத உற்பத்தியை மிகக்குறைந்த விலைக்கே வியாபாரிகள் பெறுகின்றனர். ஆப்பி ளுக்கு கொள்முதல் விலையை பாஜக அரசு தீர்மானிக்கவில்லை. இதனால் கார்ப்பரேட்டுகளின் கையே இங்கு ஓங்கி உள்ளது. அரசின் விவசாய விரோதக் கொள்கை களுக்கு எதிராக, குறிப்பாக பேக்கேஜிங் அட்டைப்பெட்டிகள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும், உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும், ஆப்பிளுக்கு கொள்முதல்  விலை அரசு  நிர்ணயம் செய்ய வேண்டும் என அகில  இந்திய விவசாயிகள் சங்கம் தொடர்ந்து  போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக் கது.

பெரும் சவாலாக மாறியுள்ள வேலையின்மை 

இந்தியப் பொருளாதார கண்கா ணிப்பு மையத்தின் (CMIE) அறிக்கை யின்அடிப்படையில், வேலையின்மை விகிதம் அதிகமுள்ள மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் நான்காவது இடத்தில்  உள்ளது. அக்டோபரில் வேலையின்மை 9.2 சதவீதமாக இருந்தது. தேசிய சராசரி யோடு ஒப்பிட்டால் 7.8 சதவீதம். 2022- ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நில வரப்படி இமாச்சலில்  வேலைக்காக பதிவுசெய்து காத்திருக்கும்  இளைஞர் களின் எண்ணிக்கை 8,77,507. புதிய தொழில்களை கொண்டுவருவதற்கு முயற்சி மேற்கொள்ளாததும், அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.  தனியார் துறையில் பணியாற்று பவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். ஒன்றிய அரசும்-மாநில அரசும் இரட்டை இன்ஜின்  நிர்வாகத்தை நடத்துகிறது என பிரதம ரும் மாநில முதல்வரும் பெருமையடித் துக்கொண்டாலும்  இளைஞர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்பதே உண்மை.

மோடியின்  தேர்தல் விளையாட்டு

கடந்த மாதம் இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட, ​​பிரதமர் மோடி மாநிலத்தில் 3,125 கிமீ கிராமப்புற சாலைகளை மேம் படுத்துவதற்கான சாலைத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதை ஒரு தேர்தல் வித்தையாகவே  மக்கள் பார்க்கிறார்கள். இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதி  நிலங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இங்கு சாலைகள் அமைக்க முடியும். மாநில முதல்வர் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில்  மலைப்பகுதிகளில் உள்ள 17,882 கிராமங்களில் 10,899 மட்டுமே சாலை களால் இணைக்கப்பட்டுள்ளன. கிட்டத்  தட்ட 39 சதவீத கிராமங்களுக்கு இன்னும் சாலை வசதி இல்லை. சாலைப்போக்கு வரத்து மேம்பட்டால் தான் இங்கு சுற்று லாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும். சுற்றுலா தான் உள்ளூர் மக்களுக்கு வரு மானம் ஈட்டும் வாய்ப்பை வழங்குகிறது. 

சாலை மேம்பாடு: அனுமதி - சிபிஎம் உறுப்பினரின் சாதனை 

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக உச்சநீதிமன்றம் 1,222 பணிகளுக்கு மட்டுமே அனுமதித்துள்ளது. கிடைக்கப்பெற்ற அனுமதியில் 70 சதவீதம் சாலை மேம்பாட்டுக்கானது. இந்த திட்டப்  பணிகளில் 173 பணிகளை தனது தொகு திக்காக போராடிப் பெற்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியோக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங்கா. அந்த 173 பணிகளில் 114 சாலைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மாநிலத்திலேயே அதிக அனுமதியை பெற்றுள்ள தொகுதி தியோக் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை வீட்டிற்கு அனுப்ப தயாராகும் அரசு ஊழியர்கள்

கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசு பழைய  பென்சன் திட்டத்தை ஒழித்தது. பழைய  பென்சன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டுமென அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழி யர்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாநில அரசு  ஊழியர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தி னர். ஆனால் பாஜக அரசு - ஊழியர்களின் இந்தப் பிரதான கோரிக்கை குறித்து ஆராய ஒரு குழுவை மட்டும் அமைத்து நழு விக்கொண்டது. பாஜக அரசின் அலட்சி யத்திற்கு அரசு ஊழியர்கள் முடிவுகட்டு வார்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநி லங்களில் பழைய பென்சன் திட்டம் அம லில் உள்ளது. தாங்கள் வெற்றி பெற்றால் பழைய பென்சன் திட்டம் அமலாகும் என்று காங்கிரஸ்  கூறிவருகிறது.

பாஜக-காங்கிரசுக்கு மாற்று நாங்களே!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் போட்டியிடுகிறது. 2017- ஆம் ஆண்டு தியோக் தனித் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்தத் தொகுதி யில் ராகேஷ்சிங்கா வெற்றிபெற்றார். தற்போது  அதிக இடங்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி  மாண வர்கள்- விவசாயிகளின்  பிரச்சனைகளை கையில் எடுத்துப் போராடியது மட்டுமல் லாது, சட்டமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பி னரைக் கொண்டிருந்தாலும் ராகேஷ் சிங்கா செய்த பணி இந்தத் தொகுதியில் அவரது வெற்றியை உறுதி செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  சிம்லா நகர்ப்புற சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடும் முன்னாள் துணைமேயர்  திகேந்தர் சிங் பன்வார் கூறுகையில், பாஜக -காங்கிரசுக்கு மாற்றாக  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சி கள் களத்தில் நிற்கின்றன. போட்டியிடும் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெறு வது தான் எங்கள் லட்சியம். இருப்பினும் தேர்தல் களத்தில் கடந்த காலங்களில் பெற்ற எண்ணிக்கையை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார்.

இமாச்சலப்பிரதேசத்தின் ஜோகிந்தர் நகர் தொகுதியில் போட்டியில் சிபிஎம் வேட்பாளர் குஷால் பரத்வாஜை ஆதரித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி வீதிவீதயாக பிரச்சாரம் மேற்கொண்டார். மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

தியோக் தொகுதி வேட்பாளர் ராகேஷ் சிங்காவை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் உரையாற்றினார்.

நிர்மந்த் தொகுதி சிபிஎம் வேட்பாளர் தேவகி நந்தை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் உரையாற்றினார்.